உப்பட்டியில் உள்ள நீலகிரி மெடிக்கல் சென்டரில் இலவச மருத்துவ முகாம். - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 14 August 2022

உப்பட்டியில் உள்ள நீலகிரி மெடிக்கல் சென்டரில் இலவச மருத்துவ முகாம்.

பந்தலூர்  தாலுக்கா பகுதியான உப்பட்டி என்ற இடத்தில்  பல்வேறு தர பட்ட மக்கள் வாழ்கின்றனர் இவர்கள் உயர் தர சிகிச்சை பெற தமிழ் நாட்டின் அன்டை மாநிலமான கேரளா அல்லது வெகு தூரம் உள்ள கோவை போன்ற பகுதிக்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது..


இதனை கருத்தில் கொண்டு  பந்தலூர் திமுக இலைஞர் அனி அமைப்பாளர் நௌபுல் என்பவர் மக்கள் நலன் கருதி சிறு மெடிக்கல் சென்டர் ஒன்றினை உப்பட்டி பகுதியில் துவங்கி இது நாளடைவில் விரிவாக்கம் செய்யப்பட்டது,  இன்னிலையில் உப்பட்டியில் உள்ள நீலகிரி மெடிக்கல் சென்றரின் நான்காம் ஆண்டை முன்னிட்டு இன்றைய தினம் இலவச மருத்துவ முகாம் துவங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திமுக நகர பொருப்பாளர்  மூர்த்தி .பாரத்மாத பள்ளியின்  பொருப்பாளர் உப்பட்டி ஆலியக்கா மற்றும் பல்வேறு பிரிவை சார்ந்த மருத்துவர்கள் செவிலியர்கள் பொதுமக்கள் கலந்துக் கொண்டனர்.

முகாமில்  கேரளா  ஊட்டி கோவை போன்ற  பகுதியில் உள்ள  மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு சிறப்பு சிகிச்சையான  பொது ருத்துவம் ஜெயபிரகாஷ் குழந்தை நல மருத்துவர்  சிதப்பரம், கண் மருத்துவர்  பிரவீன், எருமாடு மருத்துவமனை மருத்துவர் பரத், நரம்பியல் மருத்துவர்கள் என பலரும் இந்த முகாமில் சிகிச்சை அளிக்கின்றனர். மேலும் நீலகிரி சென்டரில் கண் பரிசோதனை மருத்துவம் துவங்கப்பட உள்ளது.


எங்களிடம் 24மணி நேரம் சிகிச்சை வழங்கங்கப்படுகிறது லேபரட்ரி வசதி உள்ளது தரமான மருத்துவம் வழங்கப்படுகிறது.


அதுமட்டுமல்ல இந்த தொழிலை  இலாப நோக்கத்தில் செயல் படுத்த வில்லை பிறர் கஸ்டபடுவதை உணர்ந்து துவங்கப்பட்டது என்றும் இது வரை மருந்து வாங்க வசதி இல்லாதவர்க்கு இலவசமாக மருந்து கொடுப்பதாகவும்  நௌபுல் முகாமில் தெரிவித்தார்.


மக்களின் நலன் மீது   அக்கறை கொண்டு துவங்கிய மெடிக்கல் சென்டரை மக்கள் பயன் படுத்திக்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார், இந்த முகாமில் மெடிக்கல் சென்டர் துவங்கப்பட்டது


- தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் மகேந்திரன் மற்றும் ராஜன்

No comments:

Post a Comment

Post Top Ad