தமிழக அரசு அறிவிப்புகளை அனைத்து ஊராட்சிகளிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், அனைவரின் மனதிலும் தேசம் சுதந்திரம் அடைந்ததன் பெருமிதத்தை உணரும் வகையில் "அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடி" எனும் மாபெரும் இயக்கத்தினை இந்திய அரசு துவக்கியுள்ளது.
இதன்படி, ஆகஸ்ட் 13 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரையில் தேசியக் கொடியினை அனைத்து வீடுகளிலும் ஏற்றி, இந்திய சுதந்திரத்தினையும், அதற்காக பாடுபட்ட சுதந்திரப் போராட்டத் தியாகிகளையும் நினைவில் கொள்ளும் விதமாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழக அரசின் உத்தரவின்படி, அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடியினை ஏற்றிடவும்.உத்தரவு பிரப்பிக்கப்பட்டது இதன் படி பந்தலூர் பகுதியில் உள்ள கடைகளின் முன்பாகவும் தேயிலைத்தோட்டத் தொழிலாளர்கள் தங்கள் வீடுகளின் முன்பாகவும் தேசிய கொடியினை ஏற்றி தங்கள் தேச பற்றை வெளிபடுத்தினார்கள்..
- தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் மகேந்திரன் மற்றும் நாராயணன் (எ) ராஜன்
No comments:
Post a Comment