நீலகிரி மாவட்டம் குந்தா தாலுக்கா எமரால்டு பகுதியில் செயல்பட்டுவரும் மக்கள் உரிமை பாதுகாப்பு சங்கம் கடந்த சில தினங்களாக எமரால்டு மற்றும் குந்தா தாலுகா பகுதிகளில் கனமழையின் காரணமாக பாதிப்படைத்தவர்களின் இல்லங்களுக்கு நேரடியாக சென்று அவர்களுக்கு தேவையான மளிகை பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை சங்கத்தின் சார்பாக கொடுத்துள்ளனர்.
இந்த நிகழ்ச்சியை மக்கள் உரிமை பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர் திரு நாகராஜ் அவர்களும் துணைச் செயலாளர் திரு பாண்டியன் அவர்களும் முன் நின்று செய்துள்ளனர் அவர்களுக்கு எமரால்டு சுற்றுவட்டார பொதுமக்கள் பெரும் வரவேற்பு அளித்ததோடு அவர்களுக்கு நன்றியையும் கூறியுள்ளனர்.
அவர்களுடன் சேர்ந்து நமது தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு சார்பாகவும் நீலகிரி மாவட்ட செய்தி பிரிவு சார்பாகவும் இவர்களின் சேவை மென்மேலும் தொடர வாழ்த்துகிறோம்.
- தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் கே.எஸ்.டி மகேந்திரன்
No comments:
Post a Comment