நீலகிரி மாவட்டம் குந்தா தாலுக்கா எடக்காடு பகுதிக்கு அருகாமையில் உள்ள தலையட்டி பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்ட நிலையில் தற்போது நெடுஞ்சாலை துறையினர் அந்த மண்களை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர் இன்னும் சற்று நேரத்தில் சாலை போக்குவரத்து ஆனது சீர் செய்யப்படும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் எமரால்டு அருகே அமையில் உள்ள காந்தி அடி பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு அங்கிருந்து விவசாய நிலங்கள் முழுவதுமாக இந்த நிலச்சரியில் அடித்து செல்லப்பட்டுள்ளது இதனால் விவசாயிகள் பெரும் பாதிப்பை அடைந்துள்ளனர்.
- தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் மகேந்திரன்.
No comments:
Post a Comment