நீலகிரி மாவட்டம் கூடலூர் நாடுகாணி பகுதியில் வசித்துவரும் தில்லைநாதன் என்பவரின் வீட்டை இன்று அதிகாலை 2. 30 மணி அளவில் மூன்று காட்டு யானைகள் உடைத்து சேதப்படுத்தியது.
தில்லைநாதன் குடும்பத்துடன் வெளியூர் சென்றுள்ள நிலையில் காட்டு யானைகள் வீட்டை உடைக்கும் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் கூச்சலிட்டனர் பின்னர் வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டு வனத்துறையினர் காட்டு யானைகளை விரட்டினர் இப்பகுதியில் தொடரும் காட்டு யானையின் அட்டகாசத்தால் இப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.
No comments:
Post a Comment