75வது சுதந்திர தினத்தில் அனைவரும் வீடுகளில் கொடியேற்ற நீலகிரி மாவட்ட பாஜக தலைவர் வேண்டுகோள். - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 4 August 2022

75வது சுதந்திர தினத்தில் அனைவரும் வீடுகளில் கொடியேற்ற நீலகிரி மாவட்ட பாஜக தலைவர் வேண்டுகோள்.

தமிழக பாஜகவின் சார்பில் 75 வது சுதந்திர தினத்தை அனைத்து வீடுகளிலும் கொடியேற்றத்துடன் எவ்வாறு கொண்டாடப்படுவது என தேசிய மகளிர் அணியின் தலைவி திருமதி வானதி சீனிவாசன் அவர்களது தலைமையில் மாநில பொறுப்பாளர் திரு கரு நாகராஜன் அவர்களது முன்னிலையில் ஆலோசனை கூட்டம் ஆனது சென்னை கமலாலயத்தில் நடைபெற்றது.


இந்த கூட்டத்தை சிறப்பிக்கும் விதமாக மாநில அமைப்பு பொதுச்செயலாளர் திரு கேசவ விநாயகம் ஜி மற்றும் நமது நீலகிரி மாவட்ட கோட்ட பொறுப்பாளர் திரு நந்தகுமார் ஜி ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர் மாநில தலைமையின் அறிவுறுத்தலின்படி நமது மாவட்ட தலைவர் திரு மோகன்ராஜ் அவர்களது ஆலோசனை படியும் உதகை பாஜக அலுவலகத்தில் 75வது சுதந்திர தினத்தை எவ்வாறு கொண்டாடுவது என சிறப்பு கூட்டமானது நடத்தி அதில் இந்த 75 ஆவது சுதந்திர தினத்தை சிறந்த முறையில் அனைவரது வீடுகளிலும் கொடியேற்றத்துடன் கொண்டாடப்படும் அனைத்து தாமரை சொந்தங்களும் இந்த 75 ஆவது சுதந்திர தினத்தை சிறந்த முறையில் கொண்டாட வேண்டும் என நீலகிரி மாவட்ட பாஜக சார்பில் அனைத்து  தாமரை சொந்தங்களுக்கும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது என அறிவித்துள்ளனர்.   


- தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் மகேந்திரன்.

No comments:

Post a Comment

Post Top Ad