நீலகிரி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி மகளிர் அணி சார்பாக 75 வது சுதந்திர தின தேசியக்கொடி ஏந்தி அணிவகுப்பு. - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 14 August 2022

நீலகிரி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி மகளிர் அணி சார்பாக 75 வது சுதந்திர தின தேசியக்கொடி ஏந்தி அணிவகுப்பு.

நீலகிரி மாவட்டம் பாரதிய ஜனதா கட்சி மகளிர் அணி சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட நாட்டின் 75 வது சுதந்திர தின விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இன்று கோத்தகிரி நடைபெற்ற மாபெரும் தேசியக்கொடி ஏந்தி அணிவகுப்பானது மாவட்ட மகளிர் அணி தலைவர் திருமதி. திலகேஸ்வரி ஜி தலைமையில் மாவட்ட பாஜக தலைவர் திரு. H.மோகன்ராஜ் ஜி மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர் ஐயா இட்டக்கல் போஜராஜ் ஜி மற்றும் முன்னாள் மாவட்ட தலைவரும் தற்போதய மாநில செயற்குழு உறுப்பினர் ஐயா திரு. ராமன் ஜி முன்னிலையில் சிறப்பு விருந்தினராக தேசிய மகளிர் அணி தலைவர் கோவை தெற்கு மாவட்டத்தின் சட்டமன்ற உறுப்பினர் திருமதி. வானதி சீனிவாசன் ஜி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 75 ஆவது வருடம் சுதந்திர தின ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.

அதற்கு முன்பாக கோத்தகிரி அரவேணு பகுதியில் மாவட்ட மகளிர் அணி சார்பாக உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது பின்பு கோத்தகிரி அரேவனு பகுதியில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் கோத்தகிரி ரவுண்டானாவில் இருக்கும் கல்வி தந்தை காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மகாத்மா காந்தியின் உருவப் படத்திற்கு மரியாதை செய்யப்பட்டு கோத்தகிரி ரவுண்டானா முதல் கோத்தகிரி பஸ் ஸ்டாண்ட் வரை மாபெரும் தேசியக்கொடி ஊர்வலம் நடைபெற்றது.


இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தேசிய மகளிர் அணி தலைவர் திருமதி. வானதி சீனிவாசன் ஜி தேசத்தின் பெருமையையும் தேசியக் கொடியின் பெருமையும் தேசத்திற்காக உயிர் நீத்த தேச மகான்கள் பற்றியும் நீலகிரி மாவட்டத்தின் தேசப்பற்றையும் 75 ஆவது சுதந்திர தின சிறப்புகள் குறித்தும் சிறப்புரையாற்றினார்


மாபெரும் தேசிய கொடி ஊர்வலத்தில் மாவட்ட மகளிர் அணி சார்பாக சுமார் 1500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு வந்தே மாதரம் முழங்க சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரம் நடை பயணம் செய்தனர் இதில் சிறு குழந்தைகள் பாரத மாதாவின் தோற்றங்களுடன் வருகை புரிந்தது அனைவரையும் வியக்க வைத்தது, மேலும் இன்று நடைபெற்ற மாபெரும் ஊர்வலத்தில் வானதி சீனிவாசன் அவர்களுக்கு படுகர் சமுதாய முறைப்படி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.


நீலகிரி படுகரின மக்களின் பேண்டு வாத்தியங்களும் வந்தே மாதரம் பாரத் மாதா கி ஜெய் கோஷமும் விண்ணை பிளந்தது, மாபெறும் தேசிய கொடி ஊர்வலத்தில் பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகளும் தொண்டர்களும் மற்றும் ஏராளமான பொது மக்களும் கலந்து கொண்டு தேசிய கொடி ஏந்தி சிறப்பித்தனர்.


இன்று நடைபெற்ற மாபெறும் 75வது தேசிய கொடி ஊர்வலத்தில் கலந்து கொண்ட அந்தனை பேருக்கும் மாவட்ட நிர்வாகம் சார்பாக கோத்தகிரி HRM ஹாலில் உணவு ஏற்பாடு செய்யப்பட்டது.


- தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் கே.எஸ்.டி மகேந்திரன் மற்றும் கோத்தகிரி நகர செய்தியாளர் கோபாலகிருஷ்ணன்.... 

No comments:

Post a Comment

Post Top Ad