பந்தலூர் தாலுக்காவிற்குட்பட்ட அய்யன்கொல்லி பகுதி நேற்றிரவு GDR.ஸ்கூல் மதிற் சுவரைஉடைத்துஉள்ளே நுழைந்தது . இன்னிலையில் கனமழை காரணமாக பள்ளிக்கூடம் விடுப்பு விடுவிக்கப்பட்டதால் பள்ளி மாணவியர்கள் இல்லை இதனால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
வனத்துறை பள்ளி வழாகத்திற்கு வந்து இரு ஆண் காட்டு யானைகளை விரட்டும் பனியில் ஈடுபட்டனர். இன்றுகாலை வனத்துறையினர் கேட்டை திறந்து வைத்து விரட்டியபோது அய்யன்கொல்லி பஜாருக்குள் நுழைந்து மலைவிலை பொருள்கடையின் சட்டரையும் உடைத்து சேதப்படுத்தியது.
வனத்துறையினர் யானையை விரட்டும் போது மக்களை ஓடச் செய்து யானைகளை சாமார்த்தியமாக காட்டு பக்கம் விரட்டினர் அதிகாலை என்பதால் உயிர் சேதம் ஏற்பட வில்லை இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் பரப்பரப்பு அடைந்தனர். யானை அய்யங்கொல்லி பகுதிக்கு வருவது இதுவே முதல் தடவையாகும் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
- தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் மகேந்திரன் மற்றும் தலைமை புகைப்பட கலைஞர் அருள்தாஸ்.
No comments:
Post a Comment