அய்யங்கொலி அரசு பள்ளிக்குள் நுழைந்த இரண்டு காட்டு யானைகள் பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் அசம்பாவிதங்கள் தவிர்ப்பு.
நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகாவுக்கு உட்பட்ட அய்யங்கொலி பகுதியில் நேற்று இரவு இரண்டு ஆண் காட்டு யானைகள் உள்ள வந்துள்ளது. இந்த இரு காட்டு யானைகளும் இன்று காலை 9 மணி அளவில் அய்யன்கொல்லி அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்திற்குள் நுழைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது, ஆனால் நீலகிரி மாவட்டத்தில் கனமழை காரணமாக கடந்த 3 நாட்களாக பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் பள்ளி வளாகத்தில் யாருமில்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
பள்ளி வளாகத்தில் இருந்து வனத்துறையினர் யயானைகளை விரட்டியதால் பள்ளியில் இருந்து வெளியேறிய இந்த இரு காட்டு யானைகளும் சாலையின் நடுவே ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் வனத்துறையினர் மிகவும் சாமர்த்தியமாக வனப்பகுதிக்குள் விரட்டினர் இதனால் காலையில் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் மகேந்திரன் மற்றும் நீலகிரி மாவட்ட தலைமை புகைப்பட கலைஞர் அருள்தாஸ்.
No comments:
Post a Comment