நீலகிரி மாவட்டம் முள்ளிகூர் ஊராட்சியில் அவலஞ்சி பகுதியில் பெய்த அதீத மழையின் காரணமாக அவலாஞ்சி அணை (கனடா டாம்) நிரம்பி உபரி நீர் எமரால்டு அணைக்கு இன்று காலை முதல் பாய ஆரம்பித்தது. எமரால்டு அணை முழு கொள்ளவு 212அடி யை எட்ட இன்னும் 15 அடிகளே தேவை படுகிறது. இதேபோல் மழை நீடித்தல் இன்னும் 3 அல்லது 4 நாட்களில் அணை நிரம்பிவிடும்.
எனவே தாழ்வான பகுதியில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு தங்களது கால்நடைகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அனைவரையும் முள்ளியூர் ஊராட்சி சார்பாக மல்லிகோர் ஊராட்சி தலைவர் திருமதி பிரேமா ராதாகிருஷ்ணன் அவர்கள் சார்பாகவும் கேட்டுக்கொள்கிறோம் என அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
- தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் மகேந்திரன் மற்றும் மாவட்ட தலைமை ஒளிப்பதிவாளர் அருள்தாஸ்.
No comments:
Post a Comment