கனமழையால் பாதிக்கப்பட்ட பழங்குடியின மக்களை நேரில் சந்தித்து நிவாரண பொருட்களை வழங்கிய அமைச்சர். - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 5 August 2022

கனமழையால் பாதிக்கப்பட்ட பழங்குடியின மக்களை நேரில் சந்தித்து நிவாரண பொருட்களை வழங்கிய அமைச்சர்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மூன்று தினங்களாக கன மழை பொழிந்து வரும் காரணத்தினால் தொரப்பள்ளி இருவயல் பகுதியில் வசிக்கக்கூடிய பழங்குடியின மக்களின் குடியிருப்புக்குள் வெள்ளம் சூழ்ந்ததால் அப்பகுதியில் வசிக்கும் கூடிய மக்களை அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட நடுநிலைப் பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


அவர்களை பார்வையிட்டு நிவாரண உதவிகளை வனத்துறை அமைச்சர் திரு இளித்துரை கா ராமச்சந்திரன் வழங்கி அவர்களுக்கு ஆறுதல் கூறினார் உடன் நீலகிரி மாவட்ட ஆட்சியர் திரு சா ப அம்ரித் இ.ஆ.ப அவர்கள் மேலும் கழக நிர்வாகிகளும் அரசு அதிகாரிகளும் உடனிருந்தனர்.


- தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் மகேந்திரன் மற்றும் புகைப்படக்கலைஞர் அருள்தாஸ்.

No comments:

Post a Comment

Post Top Ad