உதகையில் நாளை வணிகர்கள் சார்பில் முழு கடை அடைப்பு. - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 28 August 2022

உதகையில் நாளை வணிகர்கள் சார்பில் முழு கடை அடைப்பு.

கூடலூர் சட்டமன்ற தொகுதியில் உச்ச நீதிமன்றத்தில் உத்தரவான பப்பர் ஜோன் என்று அழைக்கப்படும் (சுற்றுச்சூழல் பாதுகாப்பில் இடைப்பட்ட பகுதி) என்று உத்தரவினால் அந்தப் பகுதி மக்கள் பெரும்பாலும் பாதிக்கப்படுகின்றனர், இந்நிலையில் அந்த பகுதி மக்களை காலி செய்யக் கூறும் தமிழக அரசு கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் கடந்த இரண்டு நாட்களாக கூடலூர் பகுதியில் உள்ள அனைத்து கடைகளிலும் கருப்பு கொடி ஏற்றி நூதன போராட்டம் நடத்தப்பட்டு வந்த நிலையில் நாளைய தினம் 29/8/2022 திங்கட்கிழமை ஒருநாள் முழு கடையடைப்பக்கம் வணிகர் சங்கம் ஒத்துழைப்பு வழங்கி உள்ளது.


இதனை தொடர்ந்து அந்த பகுதியில் ஓடும் வாகனங்களும் அன்றைய தினம் செயல்படாது என அறிவித்துள்ளனர், இதனது முக்கிய நோக்கமே இதனால் கூடலூரில் உள்ள பொதுமக்கள் பாதிக்கப்படுவதை தமிழக அரசின் கவன ஈர்ப்பை கொண்டு செல்லும் நிலையாகும் எனவே அனைத்து பொதுமக்களும் வாகன ஓட்டுனர்களும் இதற்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என இந்த போராட்டத்தை முன்னிறுத்தும் அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.


இதைப் பற்றி அவர்களிடம் கேட்கும் பொழுது நமது பிரச்சினையை தனிப்பட்ட ஒருவர் எடுத்துச் செல்லும் போது அது தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வது மிகவும் கடினம் எனவே நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட்டால் நமது பகுதியில் உள்ள அனைத்து பொது மக்களுக்கும் உதவிகரமாக இருக்கும் எனவே ஊர் கூடி தேர் இழுத்தால் இந்த பிரச்சனையும் முடிவுக்கு வரும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவையும் ரத்து செய்ய ஏதேனும் வழிவகை பிறக்கும்,  எனவே தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வரை இந்த இரண்டு நாட்கள் அனைத்து கடைகளிலும் கருப்பு கொடி ஏற்றி நூதன போராட்டத்திற்கு தாங்கள் அனைவரும் அளித்த ஒத்துழைப்பு போலவே நாளைய தினம் நடைபெறவுள்ள முழு கடையடைப்பிற்கும் தங்களது மேலான ஆதரவை எதிர்பார்க்கிறோம் என்று கூறியுள்ளனர்.



- தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் கே.எஸ்.டி மகேந்திரன் மற்றும் கூடலூர் செய்தியாளர் கார்முகில்.

No comments:

Post a Comment

Post Top Ad