உச்ச நீதிமன்ற உத்தரவை எதிர்த்து வணிகர்கள் கடையடைப்பு. - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 29 August 2022

உச்ச நீதிமன்ற உத்தரவை எதிர்த்து வணிகர்கள் கடையடைப்பு.

கூடலூர் நகர சிறு வணிகர் சங்கத்தின் சார்பாக இன்றைய தினத்தில் மாண்புமிகு உச்ச நீதிமன்றம் வழங்கி உள்ள இடைக்கால உத்தரவுப்படி வனவிலங்குகள் ஒட்டி வான்வெளிப்படி ஒரு கிலோமீட்டர் தரை வழியில் 10 கிலோ மீட்டருக்கு எந்தவித கட்டிடங்களும் வணிக நிறுவனங்களோ விவசாய நிலங்களோ இருக்கக்கூடாது சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலம் (ESZ) ஆக அறிவித்துள்ளதற்கு தமிழ்நாடு அரசும் மத்திய அரசும் இதிலிருந்து விலக்கு அளிக்க மேல்முறையீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தி கடையடைப்பு போராட்டம் இன்று 29-8-2022 திங்கட்கிழமை காலை 6 மணி முதல் 30-8-22 செவ்வாய்க்கிழமை காலை 6 மணி வரை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது மேலும் இதில் அனைத்து வாகன ஓட்டுனர்களும் தனியார் தொழிற்சாலை ஊழியர்களும் கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதியில் நடந்த அனைத்து பொதுமக்களும் ஒத்துழைப்பு அளித்து கொண்டிருக்கின்றனர்.

இன்றைய தினம் கூடலூர் பகுதியில் உள்ள எந்த ஒரு வணிக நிறுவனங்களோ சிறு குறுக்கடைகளும் திறக்காத நிலையில் வாகனங்கள் இன்றி கூடலூர் பகுதியை வெறிச்சோடி காணப்படுகிறது இதன் மூலமாக தமிழக அரசும் மத்திய அரசும் கூடலூர் மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் இந்த இடைக்கால உத்தரவை ரத்து செய்ய ஆவணம் செய்ய வேண்டும் என போராட்டத்தை முன்னிறுத்தி செல்பவர்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.


- தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் கே எஸ் டி மகேந்திரன் மற்றும் கூடலூர் செய்தியாளர் கார் முகில்

No comments:

Post a Comment

Post Top Ad