சுற்றுசூழல் உணர்திறன் மண்டலத்துக்கு எதிர்ப்பு; முதல்வருக்கு தொல். திருமாவளவன் கோரிக்கை. - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 29 August 2022

சுற்றுசூழல் உணர்திறன் மண்டலத்துக்கு எதிர்ப்பு; முதல்வருக்கு தொல். திருமாவளவன் கோரிக்கை.

வனவிலங்குகள் சரணாலயம் தேசியப் பூங்கா  போன்றவற்றைச் சுற்றி 1கி.மீ பரப்பில் சூழல் உணர்வு மண்டலம் என வரையறுத்து, அப்பகுதிகளிலிருந்து குடியிருப்புகள், விளை நிலங்கள் உள்ளிட்ட மனித நடமாட்டமுள்ள யாவற்றையும் அப்புறப்படுத்த வேண்டுமென உச்சநீதிமன்றம் அண்மையில் அளித்துள்ள தீர்ப்பு அளித்தது.வனப்பகுதிகளில் வசிக்கும் மக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 


குறிப்பாக, தமிழகத்தில்  நீலகிரி கூடலூர் பகுதியிலும் அதனையொட்டியுள்ள கேரளப் பகுதியிலும் நூற்றுக்கும் மேலான கிராமங்களைச் சார்ந்த எளிய மக்கள் தங்களின் ஆயிரக்கணக்கான  குடியிருப்புகளையும்  விளைநிலங்களையும் பறிகொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதனை எதிர்த்து மக்கள் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இன்று கூடலூரில் கடையடைப்புப் போராட்டம் நடந்து வருகிறது. 


இந்நிலையில், தமிழக அரசு மக்கள் நலன்களைக் கருத்தில் கொண்டு செப்-03 க்குள்  உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்ய வேண்டுமெனவும்,இது குறித்து, சட்டமன்ற சிறப்பு அமர்வைக் கூட்டி உச்ச நீதிமன்றத் தீர்ப்பினால் மக்கள் பாதிக்கப்படாத வகையில் சட்டப்பூர்வமான பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க இந்திய அரசை வலியுறுத்தித் தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமெனவும் மாண்புமிகு முதல்வர்  அவர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அவர்கள் தெரிவித்துள்ளார்.


- தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் கே.எஸ்.டி மகேந்திரன் மற்றும் கூடலூர் நகர செய்தியாளர் கார்முகில்.

No comments:

Post a Comment

Post Top Ad