நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் கடைகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம். டேன்டீ தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தினை காக்க வேண்டியும், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள பகுதிகளில் எந்தவிதமான வளர்ச்சிப் பணிகளையும் செயல்படுத்தக் கூடாது என்பது சம்பந்தமாக (Buffer zone) உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை நடைமுறைப்படுத்துவது சம்பந்தமாக, இதுவரை எந்த முடிவும் எடுக்காத மத்திய மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் முகமாகவும் 25.8.2022 கூடலூர் பந்தலூர் தாலுக்காவில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்களிலும், கடைகளிலும் கருப்பு கொடிகளை ஏற்றப்பட்டது.
- தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் கே.எஸ்.டி மகேந்திரன் மற்றும் கூடலூர் நகர செய்தியாளர் நாராயணன்.



No comments:
Post a Comment