நிலச்சரிவை தடுக்கும் புதிய தொழில்நுட்பம், பார்வையிட்ட மாவட்ட கண்காணிப்பு அலுவலர். - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 22 August 2022

நிலச்சரிவை தடுக்கும் புதிய தொழில்நுட்பம், பார்வையிட்ட மாவட்ட கண்காணிப்பு அலுவலர்.

தமிழகத்திலேயே முதன் முறையாக நீலகிரி மாவட்டம் உதகை கோடப்பமந்து பகுதியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ. 15 லட்சம் மதிப்பில் புதிய தொழில்நுட்ப முறையில் பொருத்தப்பட்டுள்ள நிலச்சரிவு கட்டுப்படுத்தும் மண் ஆணியினை மாவட்ட கண்கானிப்பு அலுவலர் மற்றும் அரசு சிறப்பு செயலாளர் (போக்குவரத்துத்துறை) திரு. டி. என். வெங்கடேஷ் இ.ஆ.ப., அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டர்.


உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. சா.ப.அம்ரித்  அவர்கள் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் திரு. குழந்தைராஜ் உட்பட அரசு துறை அதிகாரிகள் பலர் பார்வையிட்டனர்.
             

நிலச்சரிவை தடுப்பதற்காக கொண்டு வர பட்ட புதிய திட்டமே இந்த 'மண் ஆணி' திட்டம். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தமிழகத்திலேயே முதன் முறையாக நீலகிரி மாவட்டம் கோடப்பமந்த் பகுதியில் இதற்கான திட்ட பணிகள் தொடங்கபட்டு நிறைவு பெற்றதை அடுத்து விரைவில் தமிழ்நாட்டில் மண் சரிவு ஏற்பட கூடிய பல பகுதிகளில் இத்திட்டம் கொண்டு வர படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




- தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் கே.எஸ்.டி மகேந்திரன் மற்றும் உதகை நகர செய்தியாளர் கார்முகில்.

No comments:

Post a Comment

Post Top Ad