நுகர்வோர் பாதுகாப்பு மைய துணை தலைவர் ராஜா, ஓய்ஸ்மென் கிளப் நிர்வாகிகள் ராம்குமார், தினேஷ், அனிதா, அரசு ஆரம்ப சுகாதார நிலைய சுகாதாரா ஆய்வாளர் சேகர், செவிலியர் லட்சுமி, உதவி செவிலியர் ஜோஸ்பின், என்றும் அன்புடன் கொளப்பள்ளி சிவா மாஸ்டர், நிர்வாகி சண்முகம், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
என்றும் அன்புடன் கொளப்பள்ளி நிர்வாகி யோகேஸ்வரன், ஷாலோம் சாரிடப்பிள் டிரஸ்ட் நிர்வாகி சுப்பிரமணி ஆகியோர் முகாமினை துவக்கி வைத்தனர், நீலகிரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்க மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர். முகாமில் நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு சிகிச்சைக்கு பெற்றனர்.
15 பேர் கண் புரை அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டு உதகை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்று இலவச கண் புரை அறுவை சிகிச்சை செய்யபடுகிறது, நிகழ்ச்சியில் என்றும் அன்புடன் நிர்வாகிகள் நுகர்வோர் பாதுகாப்பு மைய நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர். கே.எஸ்.டி மகேந்திரன் மற்றும் உதகை நகர செய்தியாளர் கார்முகில்.


No comments:
Post a Comment