எமரால்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் வியாழக்கிழமை அன்று அறிவியல் இலக்கிய மன்ற மாநாடு நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் தலைமையாசிரியர் பொறுப்பு திரு மோகன கிருஷ்ணன் மற்றும் எமரால்டு ஜெ-2 காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு ஆறுச்சாமி அவர்களும் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார் பள்ளியின் தலைமையாசிரியர் திரு சுப்பிரமணியன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள் இவ்விழாவில் முதுகலை ஆசிரியர் திரு நபி ராஜ் அவர்கள் வரவேற்புரை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து பள்ளியில் பட்டதாரி ஆசிரியர் திரு விஸ்வநாதன் அவர்கள் அறிவியல் இலக்கிய மன்றத்தின் சிறப்புரை மாணவர்களுக்கு எடுத்துரைத்தார், இவ்விழாவில் ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டார்கள் இவ்விழாவில் சிறப்பு அம்சமாக கொரோனா பற்றி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உள்ளது ஆசிரியர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் மாணவ மாணவிகள் இவ்விழாவில் கலந்து கொண்டார்கள் இறுதியில் பட்டதாரி ஆசிரியர் திரு பரத் அவர்கள் நன்றியுரை கூறினார்.
- தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் கே.எஸ்.டி மகேந்திரன்.....



No comments:
Post a Comment