எமரால்டு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவியருக்கு போதைப் பொருள் விழிப்புணர்வை ஏற்படுத்திய ஜே2 காவலர்கள். - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 21 August 2022

எமரால்டு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவியருக்கு போதைப் பொருள் விழிப்புணர்வை ஏற்படுத்திய ஜே2 காவலர்கள்.

நீலகிரி மாவட்டம் குந்தா தாலுக்கா எமரால்டு பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவியருக்கு போதைப் பொருள் விழிப்புணர்வை எமரால்டு ஜே-2 காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு ஆறுச்சாமி அவர்கள் விழிப்புணர்வு உரையை ஆற்றினார்.



எமரால்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளும் எமரால்டு ஜே-2 காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு ஆறுச்சாமி அவர்கள் போதைப்பொருளினால் வரும் விளைவுகளும் அதன் பாதிப்புகளை பற்றியும் விளக்கமாக கூறினார், அப்படி அவர் கூறும் பொழுது இந்த போதைப் பொருள் உபயோகிப்பதனால் ஒரு நிமிடம் சுகம் கிடைக்கிறது ஆனால் உங்களது வாழ்க்கையை தடம் மாறுகிறது ஆகவே பள்ளி மாணவ மாணவிகள் இந்த நாட்டின் தூண்கள் நீங்கள் இதை உபயோகிக்க கூடாது என்பதனை  விளக்கமாக எடுத்துக் கூறினார் இந்த நிகழ்ச்சியின் போது பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு சுப்பிரமணி மற்றும் பள்ளியின் ஆசிரியர்கள் பள்ளி மாணவ மாணவியர்கள் உடனிருந்தனர்.



உதவி ஆய்வாளர் ஆறுச்சாமி அவர்கள் கூறும் பொழுது இந்த போதைப் பொருட்கள் எடுப்பது இன்றைய தினத்தில் நமக்கு சுகமாக இருக்கும் ஆனால் நமது வாழ்க்கையை இதில் பறிபோகிவிடும் இந்த போதைப்பொருள் எடுப்பதனால் ஒரு நிமிடம் சுகம் கிடைக்கும் ஆனால் ஒருவருடைய வாழ்க்கையை சீரழித்து விடும் ஆகவே பள்ளி மாணவ மாணவிகள் வருங்கால இந்தியாவின் தூண்கள் ஆகவே நீங்கள் இந்த போதைப் பொருட்களுக்கு அடிமையாகக்கூடாது இதில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் உங்களது பகுதியில் உள்ள பிறருக்கும் உங்களது இல்லத்தில் உள்ளவர்களுக்கும் இதைப் பற்றி விழிப்புணர்வை நீங்கள் தான் ஏற்படுத்த வேண்டும் ஏனெனில் இந்திய நாட்டின் வருங்கால தூன்களான மாணவ மாணவியர் தான் அப்படிப்பட்ட மாணவ செல்வங்கள் இந்த போதைப்பொருட்களை பற்றி விழிப்புணர்வை ஒவ்வொருவருக்கும் எடுத்துரைக்க வேண்டும் அப்படி எடுத்துரைக்கும் பொழுது அவர்களும் போதைப் பழக்கத்திலிருந்து விலகி இந்திய நாடு முன்னேறும் எனவே இந்த போதை பொருட்களை யாரும் உபயோகப்படுத்தக் கூடாது என்று விழிப்புணர்வை ஏற்படுத்தினார் அவர்களுக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு சுப்பிரமணி மற்றும் ஆசிரியர்கள் மாணவ மாணவியர்கள் நன்றி கூறினார்.


இது போன்ற விழிப்புணர்வை அனைத்து பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கும் ஏற்படுத்தினால் நமது இந்தியாவே போதை பழக்கத்திலிருந்து விடுபடம் என்ற கருத்தினை இதன் மூலம் பள்ளியின் தலைமை ஆசிரியர் அவர்கள் கூறினார். மேலும் மதிப்பிற்குரிய உதவி ஆய்வாளர் திரு ஆறுச்சாமி அவர்கள்  இங்கு வந்து நமது மாணவ செல்வங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்கு மிகவும் நன்றி என்று கூறினார்.



இது போன்ற விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் தமிழக காவல்துறைக்கு நமது தமிழக குரல் இணையதள செய்தி பிரிவின் சார்பாகவும் நீலகிரி மாவட்ட செய்தி பிரிவின் சார்பாகவும் மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் இந்த தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறோம்.



- தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் கே.எஸ்.டி மகேந்திரன்.

No comments:

Post a Comment

Post Top Ad