ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலக்குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது. - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 17 August 2022

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலக்குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது.

நீலகிரி மாவட்ட கூடுதல் ஆட்சியர் அலுவலகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலக்குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. சா. ப. அம்ரித் இ.ஆ. ப அவர்கள் தலைமையில் நடைபெற்றது.


இக்கூட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நல மாணவ மாணவியர்களுக்கு உதவி தொகை சென்றடைவதை குழு உறுப்பினர்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும், தகுதி உள்ள அணைத்து மாணவர்களுக்கும் கல்வி உதவி தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் சென்றடைய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும், விடுதிகளை பார்வையிட்டு விடுதிகள் மேம்பாடு அடைய ஆலோசனை வழங்க  தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் மனித கழிவை மனிதனே அகற்றுதல் தடை மற்றும் மறுவாழ்வு தடைச்சட்டம் 2013, குறித்து விவாதிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் இந்நடைமுறைகள்  இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் நகராட்சி,பேரூராட்சிகள், கிராமப்பாஞ்சாயத்துகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அறிக்கை அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒப்பந்த தூய்மை பணியாளர்களும் தூய்மை பணியாளர் நல வாரியத்தில் உறுப்பினர்களாக அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. தூய்மைப்பணியாளர் கல்வி உதவித்தொகை வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


இக்கூட்டத்தில் உதகை வருவாய் கோட்டாட்சியர் திரு. துரைசாமி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் திருமதி. சுகந்தி பரிமளம் மற்றும் நலக்குழு உறுப்பினர்கள் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


- தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் KST மகேந்திரன் மற்றும் உதகை நகர செய்தியாளர் கார்முகில். 

No comments:

Post a Comment

Post Top Ad