காட்டு யானை தாக்கி பெண் பலி. - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 19 August 2022

காட்டு யானை தாக்கி பெண் பலி.

நீலகிரி மாவட்டம்  ஓவேலி பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை காட்டு யானை தாக்கியதது இவரை மருத்துவ மனைக்கு கொண்டுச் செல்லும் வழியில் இறந்து விட்டார்.


நீலகிரி கூடலூர் ஓவேலி பகுதியில் தொடர்ந்து  காட்டு யானை அட்டகாசம் செய்து வருகிறது மனிதர்களை அச்சுறுத்துவதும் வீடுகளை உடைப்பதுமாக உள்ளது, இன்னிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பாக ஓவேலி பகுதியில் சிலரை காட்டு யானை தாக்கி கொன்றது அனைவருக்கும் தெரிந்த உண்மை இச்ச சம்பவத்தால் அப்பகுதி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த துயர சம்பவம் ஓய்வதற்கு முன்பாக இன்றைய தினம் ஓவேலி அடுத்துள்ள குவின்ட்  என்ற பகுதியில் வசித்து வந்த காலம் சென்ற அல்லி முத்து என்பவரின் மனைவி ராஜகுமாரி(44), இவர் தேயிலை  தோட்டத்தில் பணி முடித்து வீடு திரும்பும் போது வீட்டிற்கு செல்லக்கூடிய குறுக்குப் பாதையில் வரும் பொழுது காட்டு யானை தாக்கியது இவரின் அலரல் சத்தத்தை கேட்டு வந்து  பார்த்த போது ராஜகுமாரி மயக்க நிலையில் இருந்துள்ளார்.


காட்டு யானை தாக்கியதால் மயக்கமடைந்த ராஜகுமாரியை சந்திரன் என்பவர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார், கூடலூர் மருத்துவமனையில் மருத்துவர் அவரை பரிசோதித்த போது இவர் வரும் வழியில் அவர் இறந்து விட்டதாக கூடலூர் மருத்துவமனை உள்ள மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது


- தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் KSTமகேந்திரன் மற்றும் உதகை நகர செய்தியாளர் கார்முகில்.

No comments:

Post a Comment

Post Top Ad