தமிழக அரசு அறிவிப்புபின் படி அனைத்து ஊராட்சிகளிலும் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், அனைவரின் மனதிலும் தேசம் சுதந்திரம் அடைந்ததன் பெருமிதத்தை உணரும் வகையில் "அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடி" எனும் மாபெரும் இயக்கத்தினை இந்திய அரசு துவக்கியுள்ளது. இதன்படி, ஆகஸ்ட் 13 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரையில் தேசியக் கொடியினை அனைத்து வீடுகளிலும் ஏற்றி, இந்திய சுதந்திரத்தினையும், அதற்காக பாடுபட்ட சுதந்திரப் போராட்டத் தியாகிகளையும் நினைவில் கொள்ளும் விதமாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அதற்காக, மகளிர் சுய உதவிக் குழுக்களின் மூலமாக தரமான தேசியக் கொடி தயார் செய்யப்பட்டு, கொடிகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. எனவே, தமிழக அரசின் உத்தரவின்படி, அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடியினை ஏற்றிடவும், சுதந்திர தின விழாவினை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் பொருட்டு இன்றைய தினம் பந்தலூர் நெல்லியாளம் நகரமன்ற 11வது வார்டு உறுப்பினரும் மாவட்ட விவசாய அனி அமைப்பாளருமான ஆலன் தன் வார்டுக்குட்பட்ட பகுதியில் தேசிய கொடியை வழங்கினார், இந்நிகழ்வின் போது திமுக பொருப்பாளர்கள், உறுப்பினர்கள் கிராம மக்கள் உடன் இருந்தனர்.
No comments:
Post a Comment