நீலகிரி மாவட்டத்தில் கூடலூர் பந்தலூர் பகுதிகளில் கன மழை பெய்து வந்தது இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதில் வீடுகள் இடிந்து மரம் விழந்தும் பாதிக்கப்பட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை கேள்வி குறியானது.
இன்னிலையில் ஓவேலி பகுதியில் வசித்து வந்த சுமதி என்பவர் வேலை முடிந்து வரும் வழியில் மரம் விழுந்து இறந்து போனார் இவருடன் வந்த மருதம்மா காயம் அடைந்தார்.
இன்னிலையில் இந்த சம்பவத்தை அறிந்த பாராளுமன்ற உறுப்பினரும் முன்னால் தகவல் தொடர்பு அமைச்சருமான அ.ராசா அவர்கள் இறந்து போன சுமதி குடும்பந்தை நேரில் சென்று பார்வையிட்டு அந்த குடும்பத்திற்கு 1லட்ச ரூபாயும் கயம் அடைநாத மருதம்மா அவருக்கு 50.ஆயிரம் ரூபாயும் வழங்கினார்.
மேலும் மழையினால் வீடு உடைந்து போனவர்களுக்கு பத்தாயிரம் வீதம் 22.பேருக்கு வழங்கப்பட்டது .பின்பு கூடலூரில் மழையினால் இடிந்து போன பழைமை வாய்ந்த நூலகத்தை பார்வையிட்டார்.
இந்த நிகழ்வில் போது திமுக கட்சியின் ஒன்றியம் நகர செயலாளர்கள் மற்றும் பொருப்பாளர்கள் உறுப்பினர்கள் கலந்துக் கொண்டனர்.
- தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் மகேந்திரன்.
No comments:
Post a Comment