இதன்படி, ஆகஸ்ட் 13 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரையில் தேசியக் கொடியினை அனைத்து வீடுகளிலும் ஏற்றி, இந்திய சுதந்திரத்தினையும், அதற்காக பாடுபட்ட சுதந்திரப் போராட்டத் தியாகிகளையும் நினைவில் கொள்ளும் விதமாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அதற்காக, மகளிர் சுய உதவிக் குழுக்களின் மூலமாக தரமான தேசியக் கொடி தயார் செய்யப்பட்டு, கொடிகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. எனவே, தமிழக அரசின் உத்தரவின்படி, அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடியினை ஏற்றிடவும், சுதந்திர தின விழாவினை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் பொருட்டு இன்றைய தினம் நெல்லியாளம் நகராட்சியின் 21ஆம் வார்டு உறுப்பினரும் பந்தலூர் திமுக நகர செயலாளர் சேகர் அவர்கள் தங்கள் வார்டு பகுதிக்கு சென்று மூவர்ன கொடியினை வழங்கி அனைத்து வீடுகளிலும் ஆகஸ்ட் 15, நாளைய தினம் வீட்டின் முன் ஏற்ற வேண்டும் என கூறி அனை வருக்கும் கொடியை வழங்கினார் அப்போது அவருடன் கழக பொருப்பாளர்கள் கிராம மக்கள் உடன் இருந்தனர்.
- தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் மகேந்திரன்.
No comments:
Post a Comment