இதில், நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.சா.ப.அம்ரித்,இ.ஆ.ப. அவர்கள் கலந்து கொண்டு இந்திய தேசிய கொடியினை ஏற்றி வைத்து, பின்னர் சிறப்பாக பணிபுரிந்த அரசு பணியாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கி தலைமை ஏற்று நடத்தவுள்ளார்.
நம் நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் பொருட்டு அனைத்து வீடுகளிலும் வருகிற ஆகஸ்ட் 13 முதல் 15 வரை தேசியக்கொடி ஏற்றுவதற்கான (Har Ghar Tiranga) நெறிமுறைகள் மற்றும் வழிமுறைகள் மத்திய அரசிடமிருந்து வரப்பெற்றது.
அதனை தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடி என்ற நோக்கத்தினை நிறைவேற்றும் பொருட்டு கிராமம் மற்றும் நகரங்களில் உள்ள வீடுகளின் எண்ணிக்கை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டு அனைத்து வீடுகளுக்கும் தேசியக்கொடி வழங்குவது தொடர்பாக, மாண்புமிகு வனத்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் 11.08.2022 அன்று உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் மகளிர் சுய உதவி குழுக்கள் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு தேசியக் கொடிகள் வழங்கப்பட்டன.
அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடியினை ஏற்றும் போது மக்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்.
செய்ய வேண்டியவை.
- அனைத்து வீடுகளிலும் இன்று முதல் ஆகஸ்டு 15ம் தேதி மாலை 6.00 மணி வரை தேசியக்கொடியினை பறக்கவிட வேண்டும். பின்புதே சியக்கொடியினை இறக்கி சரியான முறையில் மடித்து அவரவர் தகுந்த இடங்களில் பாதுகாப்பாக வைக்க வேண்டும்.
செய்யக்கூடாதவை.
- தேசியக் கொடியினை சாய்வாக பறக்கவிட கூடாது.
- தேசியக் கொடியின் மேல் மலர்கள் உட்பட எந்த பொருளையும் வைக்கக் கூடாது.
- வாகனங்களின் பக்கவாட்டிலோ, முன்புறத்திலோ பயன்படுத்தக் கூடாது.
- சேதமடைந்த அல்லது அழுக்கடைந்த தேசியக் கொயினை நாம் பயன்படுத்தக் கூடாது.
- தேசியக் கொடி தரையினை தொடக் கூடாது.
- அவமானம் செய்வது போல் கண்ட இடங்களில் கட்டக் கூடாது.
- தேசியக் கொடி பிற கொடிகளுடன் பறக்கும் பொழுது தாழ்வாக பறக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
- எக்காரணம் கொண்டும் தேசியக் கொடியை தலைகீழாக கட்டக் கூடாது.(காவிநிறம் - மேல்பகுதி, வெள்ளை- நடுப்பகுதி, பச்சை – கீழ்பகுதி).
- தேசியக் கொடியின் மீது கால் படக் கூடாது.
- தேசியக் கொடியினை பயன்படுத்திய பிறகு கசக்கியோ, சுருட்டியோ வைக்கக் கூடாது.
நம் தாய்த்திருநாட்டின் சுதந்திர போராட்ட தியாகிகளின் வீரத்தினை நினைவு கூறும் விதமாகவும், தேசப்பற்றினை வெளிப்படுத்தும் விதமாகவும், ஒவ்வொரு இந்தியனின் உயிர் மூச்சாகவும் உள்ள இந்திய தேசிய கொடியினை ஒவ்வொரு இந்தியனும் ஒருமுறை ஏற்றிட வழிவகை செய்த மத்திய அரசின் அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடி என்ற நோக்கத்தினை வெற்றிகரமாக செயல்படுத்திட மக்கள் அனைவரும் மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு தருமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சா.ப.அம்ரித் இ.ஆ.ப., அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.
- தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் மகேந்திரன் மற்றும் மாவட்ட தலைமை ஒளிப்பதிவாளர் அருள்தாஸ்.
No comments:
Post a Comment