நீலகிரி மாவட்டம் குந்தா தாலுக்கா எமரால்டு பகுதியில் அவலாஞ்சி அணைக்கட்டு பகுதியானது உள்ளது இந்த அணையின் மொத்த கொள்ளளவு 145 அடிகள் இதில் 141 அடிகள் இருந்த நிலையில் எமரால்டு அணை மற்றும் அவலாஞ்சி அணை இரண்டு அணைகளும் மொத்தமாக சேர்ந்தது இதில் அவாலஞ்சி அணையின் உபரி நீரானது இரண்டு மூன்று நாட்களாக அணை நிரம்ப நான்கு அடி உள்ள நிலையில் எந்த நேரமும் தெரிந்து விடலாம் என்று அறிவிப்பு ஊராட்சியின் மூலமாக வாகன ஒளிபரப்பு மூலமாகவும் செய்தித்தாள் வழியாகவும் வெளியிடப்பட்டது அதில் தமிழக குரல் சார்பாக அந்த செய்தியை நாம் இணையதள செய்தி தளத்தில் ஒளிபரப்பி இருந்தோம் இந்த நேரத்தில் நேற்றைய தினம் மாலை 5 மணி அளவில் அணையின் முழு கொள்ளளவான 145 அடியை எட்டியதால் அணையில் ஒரு மதகு வழியாக நீரானது திறந்து விடப்பட்டது.
இதைப் பற்றி பொதுமக்கள் கூறும் பொழுது வாகன ஒலிபெருக்கி மற்றும் செய்தித்தாள் எச்சரிக்கை மூலமாக அனைவரும் எச்சரிக்கையாக இருந்ததால் பல சேதங்கள் தவிர்க்கப்பட்டது, ஆகவே இந்த எச்சரிக்கை விடுத்த முள்ளிகூர் ஊராட்சிக்கும் ஊராட்சி தலைவர் திருமதி பிரேமா ராதாகிருஷ்ணன் அவர்களுக்கும் இந்த செய்தியை இணையதளம் மூலமாக வெளியிட்ட தமிழக குரல் இணையதள செய்திக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.
- தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் மகேந்திரன்.
No comments:
Post a Comment