நீலகிரி மாவட்டம், குன்னூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட அரக்காடு பகுதியில் கடந்த 10.8.2022 அன்று சிறுத்தை தாக்கி உயிரிழந்த 4 வயது குழந்தையின் குடும்பத்திற்கு, கழக துணை பொது செயலாளரும், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.இராசா அவர்கள் 1 லட்சம் ரூபாய் வழங்கினார்.
உடன் மாவட்ட கழக செயலாளர் பா.மு.முபாரக், மாவட்ட துணை செயலாளர் ரவிகுமார், உதகை நகர செயலாளர் ஜார்ஜ், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் முஸ்தபா, ராஜூ, ஒன்றிய செயலாளர்கள் நெல்லை கண்ணன், பிரேம்குமார், பொதுக்குழு உறுப்பினர் சதகத்துல்லா உதகை நகரமன்ற தலைவர் வாணீஸ்வரி உட்பட உள்ளாட்சி பிரதிநிதிகள் கழக நிர்வாகிகள் பலர் உள்ளனர்.
- தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் மகேந்திரன் மற்றும் நீலகிரி மாவட்ட தலைமை புகைப்படக் கலைஞர் அருள்தாஸ்.
No comments:
Post a Comment