கோத்தகிரி வருவாய் வட்டாட்சியர் காயத்ரி, பேரூராட்சி செயல் அலுவலர் மணிகண்டன், சுகாதார ஆய்வாளர் ரஞ்சித், கோத்தகிரி ஆய்வாளர் வேல்முருகன், போக்குவரத்து ஆய்வாளர் சரவணகுமார், உதவி ஆய்வாளர் சேகர், ஆகியோர் தலைமையில் கோத்தகிரி நுகர்வோர் பாதுகாப்பு சங்கமும் இணைந்து நடத்தினர்.
என்.பி.ஏ. சென்டர் பாலிடெக்னிக் கல்லூரி, கே.பி.எஸ் கல்லூரி சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் இணைந்து ராம்சந்த், சதுக்கத்திலிருந்து துவங்கப்பட்டு, ஜான்சன் ஸ்கொயர், மார்க்கெட் வழியாக வந்து பஸ் நிலையம் வந்து அடைந்து புகையிலை மற்றும் போதை பொருட்களை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
பின்பு மாணவ மாணவிகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டு நிறைவு செய்யப்பட்டது.
- தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் மகேந்திரன் மற்றும் கோத்தகிரி நகர செய்தியாளர் கோபாலகிருஷ்ணன்
No comments:
Post a Comment