தாழ்வான பகுதி மற்றும் கரையோர கிராமங்களான எமரால்டு நேரு நகர் நேரு கண்டி சுரேந்திர நகர் எடக்காடு லாரன்ஸ் போன்ற பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது மேலும் இந்த தாழ்வான பகுதிகளில் விவசாயம் செய்யும் விவசாயிகள் தங்களது விவசாய தளவாட பொருட்களை பத்திரப்படுத்தி கொள்ளுமாறும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது மேலும் கால்நடை வளர்ப்பவர்கள் தங்களது கால்நடைகளை தாழ்வான பகுதிகளுக்கு அனுமதிக்க வேண்டாம் எனவும் முள்ளிகூர் ஊராட்சி சார்பாக கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள் .
மேலும் இதைப்பற்றி முள்ளிகூர் ஊராட்சி தலைவர் திருமதி பிரேமா ராதாகிருஷ்ணன் அவர்கள் கூறும் பொழுது அவலாஞ்சி அணையின் முழு கொள்ளளவை ஏற்ற இன்னும் நான்கு அடிகளே தேவைப்படும் நிலையில் இன்று மாலை அல்லது நாளை காலைக்குள் இந்த அணை எந்த நேரமும் திறக்கப்பட வாய்ப்புள்ளதால் வாழ்வான பகுதியில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
- தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் எமரால்டு அவலாஞ்சி அணைக்கட்டு பகுதியிலிருந்து தலைமை செய்தியாளர் மகேந்திரன்
No comments:
Post a Comment