ஓவேலியில் மீண்டும் புலி தாக்குதல் – மேலும் ஒருவர் பலி - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 21 August 2026

ஓவேலியில் மீண்டும் புலி தாக்குதல் – மேலும் ஒருவர் பலி

 


ஓவேலியில் மீண்டும் புலி தாக்குதல் – மேலும் ஒருவர் பலி

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள ஓவேலி–லார்ஸ்டன் பகுதியில் புலி தாக்கியதில் ரவிச்சந்திரன் (54) என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். விளைநிலப் பகுதியில் அவரைத் தாக்கிய புலி, உடலை இழுத்துச் சென்று சில பகுதிகளைத் தின்ற நிலையில் சடலம் கண்டெடுக்கப்பட்டது.


இதே பகுதியில் சுமார் 2 வாரங்களுக்கு முன்பு பாலகிருஷ்ணன் என்பவர் தனியார் காபி தோட்டத்தில் குடிநீர் குழாயைச் சீரமைக்கச் சென்றபோது புலி தாக்கி உயிரிழந்தார்.


தொடர் உயிரிழப்புகளால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், மனிதர்களைத் தாக்கும் புலியை உடனடியாக கூண்டு வைத்துப் பிடிக்கும் வரை ரவிச்சந்திரனின் உடலை எடுக்க விடமாட்டோம் எனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வனத்துறைக்கு மக்கள் வைக்கும் கோரிக்கைகள்

இரண்டு தாக்குதல்களுக்கும் ஒரே புலிதான் காரணமா என்பதை வனத்துறை உறுதி செய்ய வேண்டும்.

புலியின் நடமாட்டத்தைக் கண்காணிக்க கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும்.

தேவையான இடங்களில் உடனடியாக கூண்டுகள் அமைத்து, பொதுமக்களின் உயிருக்கு மேலும் ஆபத்து ஏற்படுவதற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் போராட்டம் செய்தனர் இது குறித்து சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளும் வனத்துறை அலுவலர்களும் பேச்சுவார்த்தை செய்து போராட்டக்காரர்கள் இடம் இருந்து புனிதாக்கு இறந்தவரின் உடலை மீட்டு உடற் கூறாய்விற்காக கூடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நௌசாத் செய்தியாளர் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad