நீலகிரி இளைஞர் பாசறை பொதுக்குழு கூட்டம் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 6 July 2026

நீலகிரி இளைஞர் பாசறை பொதுக்குழு கூட்டம்

 


நீலகிரி இளைஞர் பாசறை பொதுக்குழு கூட்டம் 


நீலகிரி இளைஞர் பாசறை சார்பாக பொதுக்குழு கூட்டம் உதகை இளைஞர் விடுதி அரங்கில் நடைபெற்றது.  தமிழ்ச்செம்மல் புலவர்  இர.நாகராஜ் அனைவரையும் வரவேற்றார். இளைஞர் பாசறை தலைவர் மதிவாணன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக மேரா யுவ பாரத் உதவி இயக்குநர் விவேக் கலந்துக் கொண்டு உரையாற்றினார். ஆயூர்வேதிக் மருத்துவர் செந்தில் குமார் முன்னிலை வகித்தார். இந்நிகழ்வில்  புதிய நிர்வாகிகள் பன்னிரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு தேர்வு செய்யப்பட்டனர். ஜீலை மாதம் நடைபெறும் நிகழ்வுகள் குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிகழ்ச்சியில் இளைஞர் விடுதி கண்ணன், பி.எல்.எம் வங்கி பொறுப்பாளர் பிரியா, சமூக ஆர்வலர்  பானுபிரியா,பி.பிரியா, இல்லம் தேடி கல்வி ராணி, ஐ,டி விங் சிந்தியா, மனித உரிமைகள் கழகம் எப்.ஷிபா, நடன இயக்குநர்கள் வில்லியம், கிருஷ்ணா ஆகியோர் கலந்துக் கொண்டனர். இளைஞர் பாசறை வழக்கறிஞர் ஹரிஹரன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad