நீலகிரி மாவட்ட சமூக தன்னார்வலர்கள் கூட்டமைப்பின் சார்பில் - இலவச கண் பரிசோதனை முகாம் விலையில்லா கண் கண்ணாடி வழங்கும் முகாம் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 12 July 2026

நீலகிரி மாவட்ட சமூக தன்னார்வலர்கள் கூட்டமைப்பின் சார்பில் - இலவச கண் பரிசோதனை முகாம் விலையில்லா கண் கண்ணாடி வழங்கும் முகாம்


 நீலகிரி மாவட்ட சமூக தன்னார்வலர்கள் கூட்டமைப்பின் சார்பில் - இலவச கண் பரிசோதனை முகாம்  விலையில்லா கண் கண்ணாடி  வழங்கும் முகாம் நடைபெற்றது  நூறுக்கும் மேற்பட்ட பயனாளிகள் கலந்து கொண்டனர்  , கூட்டமைப்பின் நீலகிரி மாவட்ட இணை செயலாளர் ஜார்ஜ் பிரிட்டோ  அனைவரையும் வரவேற்றார்,  தமிழக வெற்றி கழகத்தின் நீலகிரி மாவட்ட பொறுப்பாளர்  ரமேஷ் நிகழ்வினை துவக்கி வைத்தார்  அவருடன் மாவட்ட நிர்வாகிகளும் கலந்து கொண்டனர், 


 சிறப்பாக பணியாற்றிய தன்னார்வலர்களுக்கு நேரு யுவகேந்திரா ரஞ்சித் , அப்துல் கலாம் நினைவு அறக்கட்டளை சாதிக், அப்துல் கலாம் உதவும் கரங்கள்  லாரன்ஸ், நீலகிரி கல்வி அறக்கட்டளை  ஜாஃபர், நீலகிரி மக்கள் உரிமைகள் அமைப்பின் வினோத்குமார்  நினைவு பரிசுகளை வழங்கினர் , நீலகிரி மாவட்ட சமூக தன்னார்வலர் கூட்டமைப்பின் மாவட்ட தலைவர் சுரேஷ் ரமணா  நன்றி உரையாற்றினார் , தமிழ் இயக்கத்தின் மாணவரணி பொறுப்பாளர்  சுதிர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad