கோத்தகிரியில் போதை ஒழிப்பு பேரணி நடைபெற்றது .
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் ஒர சோலை நற்பணி அறக்கட்டளை பிரம்ம குமாரிகள் ஆன்மீக பிரம்ம குமாரிகள் ஆன்மீகபல்கலைக்கழகம் நீலகிரி மாவட்ட செஞ்சிலுவைச் சங்கம் ஆகியோர் இணைந்து இந்த நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்திருந்தனர். குன்னூர் சட்டமன்ற உறுப்பினர் கே. எம் . ராஜு அவர்கள் இந்த நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். கோத்தகிரி காந்தி மைதானத்தில் துவங்கிய இந்த பேரணியில் கோத்தகிரி வட்டாரத்தில் உள்ள அனைத்து பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் ஆயிரக்கணக்கில் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் போதை ஒழிப்பு குறித்து பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் போது குறும்படங்கள் பள்ளி மாணவர்களின் நாடகம் போன்ற பல நிகழ்ச்சிகள் நடைபெற்றது. கோத்தகிரி அரிமா சங்கம் ரோட்டரி சங்கம் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கோத்தகிரி குடிமக்கள் நலவாழ்வு மன்றம் போன்ற பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் பங்கேற்றன. அறிவியல் இயக்கத்தின் மாநில கருத்தாளர் கே .ஜே . ராஜு அவர்கள் பேசும் பொழுது ஒருவரது போதை பழக்கம் அவருடைய மரபணுவில் பதியப்பட்டு அவருடைய பரம்பரையே போதை பழக்கத்திற்கு அடிமையாக்கும் வலிமையுள்ளது என குறிப்பிட்டார். பிரம்ம குமாரிகள் இயக்கத்தைச் சேர்ந்த ரவி அவர்கள் பேசும் பொழுது அனைத்து வகையான போதை பழக்கத்திலிருந்து விடுதலைப் பெரும் வகையில் உரிய தியான பயிற்சிகள் இலவசமாக வழங்கப்படுகிறது என கூறினார். முன்னதாக ஒரசோளல நற்பணி அறக்கட்டளையின் செயலர் சுரேஷ் அனைவரையும் வரவேற்றார். தலைவர் ராஜேந்திரன் நன்றி கூறினார். சத்தியமூர்த்தி ராமகிருஷ்ணன் ஜீனஸ் புக் பாபு ஆகியோர் ஹலோ நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக மேற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.



No comments:
Post a Comment