நஞ்சநாடு மேல்நிலைப் பள்ளியில் சர்வதேச யோகா தினம்.
நீலகிரி மாவட்டம் 31தமிழ்நாடு தனி அணி என்.சி.சி. அமைப்பின் சார்பில் பள்ளி, கல்லூரிகளில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.
நஞ்சநாடு மேல்நிலைப் பள்ளியில் நஞ்சநாடு, விவேகானந்தா மெட்ரிக், பாலாடா,ஏகலைவா, மஞ்சூர் ஆகிய பள்ளிகளை சேர்ந்த 125 மாணவியர் பயிற்சி பெற்றனர்.
யோகாவின் சிறப்பம்சங்களை பற்றி என்.சி.சி. முதன்மை அலுவலர் சுப்ரமணியன் எடுத்துரைத்தார் . மருத்துவர் மேகலா மற்றும் என்.சி.சி. அலுவலர் ஜெனிபர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக மேற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.


No comments:
Post a Comment