சோலூர் தூபக்கன்டியில் இலவச கண் சிகிச்சை முகாம் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 15 June 2026

சோலூர் தூபக்கன்டியில் இலவச கண் சிகிச்சை முகாம்

 


சோலூர் தூபக்கன்டியில் இலவச கண் சிகிச்சை முகாம் 100கும் மேற்பட்டோர் பயன்

உதகை சோலூர் அருகே தூபகண்டி அங்கன்வாடி மையத்தில் நீலகிரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், புளுமவுண்டன் நியர் விஷன் கலெக்டிவ் மற்றும் ஆல் தி சில்ரன் ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம்  நடைபெற்றது.


முகாமிற்கு சோலூர் பேரூராட்சி தன்னார்வலர் கோக்கால் சிவகுமார் தலைமை தாங்கினார். கோக்கால் அரசு உயர்நிலைப்பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்ற பொறுப்பு ஆசிரியர் ராஜா, ஆல் தி சில்ரன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித் மற்றும் சமூக ஆர்வலர் ராஜ்குமார், சாந்தமூர்த்தி  ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


முகாமை கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய செயலாளர் சு. சிவசுப்பிரமணியம், கோக்கால் ஊர் நாட்டாமை சிவகுமார் கண்ணன், தலைவர்கள் ரவி (தூபகண்டி), நீலி (கண்ணேரிமுக்கு) ஆகியோர் முகாமை தொடங்கி வைத்தனர்.


முகாமில் நீலகிரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கத்தின் திட்ட மேலாளர் மருத்துவர் விஜயஸ்ரீ தலைமையில் கண் மருத்துவர் டாக்டர் திலீப் உள்ளிட்ட மருத்துவக் குழுவினர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு கண் பரிசோதனை செய்து, தேவையான மருத்துவ ஆலோசனைகளை வழங்கினர். மேலும் கண் தொழில்நுட்ப நிபுணர் பாக்கியலட்சுமி மற்றும் ஜப்னா குழுவினர் கிட்டப்பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு இலவச கண் கண்ணாடிகளை வழங்கினர்.


இந்த முகாமில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு கண் பரிசோதனை செய்து கொண்டனர். பரிசோதனையின் போது 32 பேருக்கு கண்புரை (Cataract) பாதிப்பு, 5 பேருக்கு கண் நரம்பு தொடர்பான குறைபாடுகள், 70 பேருக்கு கிட்டப்பார்வை குறைபாடு மற்றும் 10 குழந்தைகளுக்கு பார்வை குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டது.


இதில் கண்புரை பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 24 பேர் இலவச கண்புரை அறுவை சிகிச்சைக்காக உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லபட்டது. மேலும் 65 பேருக்கு கிட்ட பார்வைக்கான இலவச கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டன. பிற நோயாளிகள் தேவையான மேல்சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டனர்.


முகாமிற்கான ஏற்பாடுகளை சோலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் ராகுல், செவிலியர்கள், கோக்கால் கிராம நிர்வாகிகள், கோக்கால் பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்ற உறுப்பினர்கள் மற்றும் தன்னார்வலர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.


தொடர்ந்து ஊர்மக்களின் ஒத்துழைப்போடு மக்களிடையே கண் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, பார்வை இழப்பை தடுக்கும் நோக்கில் இத்தகைய முகாம்கள் தொடர்ந்து நடத்தப்படும் என முடிவு செய்யப்பட்டது.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad