சோலூர் அரசு மேல்நிலை பள்ளியில் குடிமக்கள் நுகர்வோர் மன்ற கூட்டம் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 12 June 2026

சோலூர் அரசு மேல்நிலை பள்ளியில் குடிமக்கள் நுகர்வோர் மன்ற கூட்டம்

 


உதகை அருகே சோலூர் அரசு மேல்நிலை பள்ளியில் குடிமக்கள் நுகர்வோர் மன்ற கூட்டம் இன்று நடைபெற்றது. 


பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்றம் கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் ஆகியன சார்பில் நடைபெற்ற கூட்டத்திற்கு நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஷோபனா தலைமை தாங்கினார். கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் செயலாளர் சிவசுப்பிரமணியம் பேசும்போது மாணவர்களிடம் தற்போது பரவிவரும் நொறுக்கு தீனிகள்,  பதப்படுத்தப்பட்ட உணவுகள், செயற்கை நிறங்கள் சேர்க்கப்பட்ட உணவுகள் மற்றும் பாக்கெட் தின்பண்டங்களை அதிகம் எடுத்து கொள்வதால் அவற்றில் உள்ள ரசாயனங்கள், குழந்தைகளை உடல் பருமன் (Obesity)  இளம் வயதில் சிறுநீரக பாதிப்பு, நினைவு திறன் பாதிப்பு, இதய கோளாறுகள், புற்றுநோய் தாக்குதல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர். எனவே இவற்றை தவிர்க்க வேண்டும். நொறுக்குதீனிகளை தவிர்த்து தினசரி உணவில் அதிகப்படியான பருப்புவகைகள்,  அனைத்துவகை காய்கறிகள், பழங்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். பொதுஅறிவு வளர்த்துக்கொள்ள தினசரி செய்தித்தாள்கள் வாசித்தல், தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகள், பொது அறிவு புத்தகங்களை வாசிக்க வேண்டும் என்றார்.


ஆல் தி சில்ரன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித் பேசும்போது இன்றைய போட்டி நிறைந்த உலகில் திறமைகளை தகுதியாக கருதப்படுகிறது.  தயக்கமின்றி பேசவும், சரியான கருத்துகளை முன்வைக்க வேண்டும். சுறுசுறுப்பாக செயல்படுவார்களை விரைவில் வேலைக்கு சேர்த்து கொள்ளப்படுவார்கள். இல்லாத திறமைகளை வளர்த்துக்கொள்வது அவசியம் என்றார். 


சமூக ஆர்வலர் சிவகுமார், பள்ளி ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மேற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad