ஒன்றிய அரசு பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலைகளை உயர்த்தியதை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் உதகையில் ஆர்ப்பாட்டம்
ஒன்றிய அரசு பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலைகளை உயர்த்தியதை கண்டித்தும் 44 தொழிலாளர் நல சட்டங்களை நான்கு தொகுப்புகளாக சுருக்கியதை திரும்ப பெற கோரியும் விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்க கோரியும் தமிழக முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது அதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்டம் உதகை ஏடிசி திடல் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் ஏ நவீன்சந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் தோழர் ஆசரா தோழர் எல் சங்கரலிங்கம் கண்டன உரையாற்றினர் இதில் மாவட்ட குழு உறுப்பினர் பி கணேசன் தாலுக்கா உறுப்பினர்கள் ராஜரத்தினம் புட்டுசாமி தமிழ்மணி ஹரிபாபு மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டு ஒன்றிய அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர் இறுதியாக தாலுக்கா உறுப்பினர் O.குமார் நன்றி கூறி ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்தார்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக தலைமை செய்தியாளர் அருள்தாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...


No comments:
Post a Comment