கூடலூர் மின்சார வாரியம் உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் இலவச மருத்துவ முகாம் மற்றும் கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
இந்திய செஞ்சிலுவை சங்கம், கூடலூர் மின்சார வாரியம், கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், ஆகியன இணைந்து நடத்திய முகாமுக்கு கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய செயலாளர் தலைமை தாங்கினார்.
உதவி செயற்பொறியாளர் தமிழரன், உதவி மின் பொறியாளர்கள் மஜீத், கார்த்திக், ஹரி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மின்சார வாரிய செயற்பொறியாளர் முத்துக்குமார், நல்லோர் வட்ட மாநில தலைவர் பாலு ஆகியோர் முகாமினை துவக்கி வைத்தனர்.
செஞ்சிலுவை சங்க மருத்துவ குழு மருத்துவர் சிவபிரசாத், மருந்தளுநர் நவீன், நிர்வாக அலுவலர் லாய்சன், செவிலியர் கிரிஜா உள்ளிட்டோர் இரத்த அழுத்தம் இரத்த சர்க்கரை அளவு மற்றும் பொது மருத்துவ பரிசோதனை செய்தனர்.
கண் தொழில்நுட்புனர் பாக்கியலட்சுமி உள்ளிட்ட குழுவினர் கண் பரிசோதனை மேற்கொண்டனர்.
முகாமில் 100க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர். 75 பேருக்கு கிட்ட பார்வைக்கான கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டன.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...


No comments:
Post a Comment