பந்தலூர் அருகே பொன்னாணி பகுதியில் சாலையில் கொட்டி உள்ள மண்ணால் வாகன ஓட்டிகள் அவதி.
பந்தலூர் உப்பட்டி, பொன்னானி வழியாக முக்கட்டி சுல்தான் பத்தேரி சென்று வரும் சாலை உள்ளது. இந்த சாலையில் அரசு பேருந்துகள் தனியார் வாகனங்கள் பெருமளவில் சென்று வருகின்றன.
பொன்னானி அருகே சாலையோட்டிய பகுதியில் தனியார் தோட்டத்தில் மண் வெட்டி அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் பொன்னானி சாலையில் மண் நிரம்பி மழையினால் சேரும் சகதியுமாக மாறி விட்டன. கீழிருந்து வரும் வாகனங்கள் மற்றும் மேலிருந்து செல்லும் வாகனங்கள் சேற்றில் செல்லும்போது பிடித்தம் இல்லாமல் இந்த வழியாக செல்லும் வாகனங்கள் சிரமப்படும் சூழல் ஏற்பட்டு உள்ளது. இருசக்கர வாகனங்கள் எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிடும் போது சறுக்கி விழும் ஆபத்தும் உள்ளது. நடந்து செல்லும் கூலி தொழிலாளர், பள்ளி மாணவ மாணவிகள் சேற்றில் சிக்கி விழுந்து அவதி படுகின்றனர்.
எனவே இந்த சாலை பகுதியை சம்பந்தபட்ட துறையினர் ஆய்வு செய்து மழை பெய்து கொண்டிருக்கும் போது மண் எடுப்பதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...


No comments:
Post a Comment