நீலகிரி மாவட்டத்தில் அகில இந்திய NCC மாணவர்களின் இரண்டாம் கட்ட மலையேற்ற பயிற்சி முகாம்.
கோவை மண்டலம் என்சிசி இயக்குநரகம் சார்பில் இரண்டாம் கட்ட மலையேற்ற பயிற்சி முகாம் மே 16 முதல் மே 23 வரை கோவை கமாண்டர் கர்ணல் இராமநாதன் அவர்கள் தலைமையில் நீலகிரி மாவட்டம் பாலாடா ஏகலைவா மாதிரி பள்ளியில் நடைபெறுகிறது.
இப்பயிற்சி முகாமில் தமிழ்நாடு, ஒடிசா, மகாராஷ்டிரா , கோவா,கேரளா, கர்நாடகா,இலட்சத்தீவு, அந்தமான், பாண்டிச்சேரி ஆகிய இயக்குநரகத்தில் இருந்து சுமார் 500 மாணவிகள் பங்கேற்றனர் தினமும் 12 கிலோமீட்டர்கள் நடைபயிற்சியுடன் உருளைக்கிழங்கு ஆராய்ச்சி மையம்,வானவியல் ஆராய்ச்சி மையம்,பழங்குடியினர் மையம், இராணுவ மியூசியம், கர்நாடகா பூங்கா ஆகியவற்றிற்கு மலை இரயில் பயணம் மூலம் வழங்கப்படுகிறது.
பயிற்சிகளை கர்ணல் சித்து, லெப்டினன் கர்ணல் கார்த்திகேயன்,தீபக்,மேஜர் மன்ஜித் கவூர், கேப்டன் பகராஜ்,சுபேதார் ஜலன்,திவாரி ஆகியோர் தருகின்றனர். பயிற்சிக்கான ஏற்பாடுகளை நீலகிரி மாவட்ட என்சிசி முதன்மை அலுவலர் சுப்பிரமணி அவர்கள் செய்து வருகிறார்.
தமிழக குரல் செய்திகளுக்காக மேற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் K .A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.


No comments:
Post a Comment