பந்தலூர் அருகே தேவாலா அன்னை வேளாங்கன்னி தட்டச்சு பயிற்சி மையத்தில் இலவச பொது மருத்துவம் மற்றும் கண் பரிசோதனை முகாம் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 8 May 2026

பந்தலூர் அருகே தேவாலா அன்னை வேளாங்கன்னி தட்டச்சு பயிற்சி மையத்தில் இலவச பொது மருத்துவம் மற்றும் கண் பரிசோதனை முகாம்


 பந்தலூர் அருகே தேவாலா அன்னை வேளாங்கன்னி தட்டச்சு பயிற்சி மையத்தில் இலவச பொது மருத்துவம் மற்றும் கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. 

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், இந்திய செஞ்சிலுவை சங்க மருத்துவக் குழு, அன்னை வேளாங்கன்னி தட்டச்சு பயிற்சி மையம், ஆல் தி சில்ரன் ஆகிய இணைந்து நடத்திய இந்த இலவச மருத்துவ மற்றும் கண் பரிசோதனை முகாமிற்கு அன்னை வேளாங்கன்னி தட்டச்சு பயிற்சி மைய முதல்வர் எபினேசர் தலைமை தாங்கினார். 


கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம், ஆல் தி சில்ரன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித் தட்டச்சு பயிற்சி மைய ஆசிரியர் தனுஷ்கா ஆகியோர் முன்னிலை வகித்தனர். 


நிகழ்ச்சியில் செஞ்சிலுவை சங்க மருத்துவ குழு மருத்துவர் ஜேன் மார்டினெஸ் தலைமையில் மருந்தாளுநர் நவீன், செவிலியர் சுமதி, நிர்வாக அலுவலர் லாய்சன் உள்ளிட்ட குழுவினர் ரத்த அழுத்தம், ரத்த சர்க்கரை பரிசோதனை மற்றும் பொது மருத்துவ சிகிச்சைகள் அளித்தனர். தேவை உள்ளவர்களுக்கு மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டன. 


அதுபோல கண் மருத்துவர் பிரவின் தலைமையிலான கண் தொழில்நுட்ப உதவியாளர் பாக்யா அடங்கிய குழுவினர் கிட்டப்பார்வை, தூரப்பார்வை பரிசோதனை உள்ளிட்ட கண் பரிசோதனைகள் மேற்கொண்டனர். கிட்ட பார்வை பாதிப்பு  உள்ள 55 பேர்களுக்கு  இலவச கண் கண்ணாடிகள் வழங்கினார்.


15 பேர் கண்புரை அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரை செய்யப்பட்டது. முகாமில் பயிற்சி மைய மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad