ஶ்ரீ சாய்நிவாஸ், மனசு அறக்கட்டளை இலவச ஆம்புலன்ஸ் சேவை.
நீலகிரி மாவட்டம் குன்னூர் உபதலை ஶ்ரீ சாய் நிவாஸ் ஶ்ரீ ஆனந்த குரு மேக்நாத் சாயி அவர்களால் ஒரு ஆம்புலன்ஸ் வாகனம் மனசு அறக்கட்டளை நிர்வாகத்திற்க்கு வழங்கப்பட்டது. மே 22 அன்று ஶ்ரீ ஆனந்த குரு மேக்நாத் சாயி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இலவச ஆம்புலன்ஸ் சேவை துவங்குவதாக மனசு அறக்கட்டளை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கோயமுத்தூர், மேட்டுப்பாளையம் மற்றும் அன்னூர் சுற்றுவட்டாரத்தில் இறப்பு நிகழ்வில் ஈம சடங்குகள் செய்ய எந்த ஹட்டியாக இருந்தாலும் பெட்ரோல் , பேட்டா உட்பட எந்த செலவும் இல்லாமல் முழுவதும் இலவசமாக ஹட்டிக்கு கொண்டு சேர்க்கும் பணியில் சாஸ் நிவாஸ் உடன் இணைந்து மனசு அறக்கட்டளை நிர்வாகம் முற்றிலும் இலவச ஆம்புலன்ஸ் சேவையில் ஈடுபடுகிறது.
இடம்: பெரியநாயக்கன்பாளையம்.
அலைபேசி: 9787141191.
9443894432.. 9842888776....
ஶ்ரீ சாய்நிவாஸ் , மனசு அறக்கட்டளையின் இந்த முற்றிலும் இலவச ஆம்புலன்ஸ் சேவையை தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு சார்பாக பாராட்டுகிறோம். வளரட்டும் தங்களின் சேவை.
தமிழக குரல் செய்திகளுக்காக மேற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.


No comments:
Post a Comment