தமிழியக்கத்தின் சார்பில் மாணவ மாணவியர்களை ஊக்குவிக்கும் வாழ்க்கையில் வரைதல் போட்டி - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 17 May 2026

தமிழியக்கத்தின் சார்பில் மாணவ மாணவியர்களை ஊக்குவிக்கும் வாழ்க்கையில் வரைதல் போட்டி


தமிழியக்கத்தின் சார்பில் மாணவ மாணவியர்களை ஊக்குவிக்கும் வாழ்க்கையில்  வரைதல் போட்டி

நீலகிரி மாவட்டம் உதகை பகுதியில் சிறப்பாக இயங்கிக் கொண்டிருக்கும்  எஸ் ஆர் வி எஸ் பள்ளியின் ஸ்ரீ விநாயகா கல்வி அறக்கட்டளை மற்றும் தமிழியக்கத்தின் சார்பில் மாணவ மாணவியர்களை ஊக்குவிக்கும் வாழ்க்கையில்  வரைதல் போட்டி நடைபெற்றது. 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் விருப்பத்துடன் கலந்து கொண்டனர்.

 


ஸ்ரீ விநாயகா கல்வி அறக்கட்டளையின்  தலைவர் ஹரிஹரன்  மற்றும் தமிழியக்கத்தின் மாவட்ட தலைவர் அமுதவல்லி, ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் ரமணா, தகவல் தொடர்பாளர் ஜாபர், மாணவரணி பொறுப்பாளர் சுதீர், நிகழ்விற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்,  வரைதல் போட்டிக்கான நடுவர்களாக ஓவிய ஆசிரியர்  மோகன், ராஜு, சாலமன் கலந்து கொண்டனர்.

 

சிறப்பு விருந்தினர்களாக த.வெ.க, நகர செயலாளர் ஜெயக்குமார்  மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்  போட்டியில் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு  மாணவர்களுக்கு பரிசுகள் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad