கோத்தகிரி அருகே கெரடா மட்டம் பகுதியில் மதுக்கடை இடமாற்றம் கோரி பெண்கள் பொதுமக்கள் முற்றுகை போராட்டம்:
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே உள்ள கெரடா மட்டம் குடியிருப்பு பகுதியில் செயல்பட்டு வரும்
தமிழ்நாடு மாநில சந்தைப்படுத்தல் கழகம் (டாஸ்மாக்) மதுக்கடையை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி, அப்பகுதி பெண்கள் மற்றும் பொதுமக்கள் இன்று அதிகாலையில் கடை முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குடியிருப்புகளை ஒட்டி இந்த மதுக்கடை இயங்கி வருவதால், அந்தப் பகுதியில் வசிக்கும் இளைஞர்கள் மற்றும் குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாக பெண்கள் தெரிவித்தனர்.
குறிப்பாக, கடையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி, அதிகாலை முதல் இரவு வரை எந்த நேரத்திலும் மது விற்பனை நடைபெறுவதாகவும் குற்றம்சாட்டினர்.
இதுகுறித்து பலமுறை காவல்துறையிடம் புகார் அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அவர்கள் வேதனை தெரிவித்தனர்.
இதனைத்ஒட்டி இயங்கும் இந்த மதுக்கடையை உடனடியாக வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்,
மேலும்
இந்த பகுதியில் நடைபெற்று வரும் 24 மணி நேர மது விற்பனையை முழுமையாக தடுக்க வேண்டும்
என வலியுறுத்தி பெண்கள் மற்றும் பொதுமக்கள் கடை முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின் போது, கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த மது பாட்டில்களை வெளியில் தூக்கி வீசி, கடும் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த திடீர் போராட்டத்தால், கோத்தகிரி கெரடா மட்டம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் தமிழக குரல் செய்தியாளர் C. விஷ்ணுதாஸ் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு


No comments:
Post a Comment