கோத்தகிரி தோட்டக்கலைத்துறை பூச்சி மேலாண்மை பயிற்சி.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி வட்டாரம் தோட்டக்கலை மலை பயிர்கள் துறை வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை அட்மா திட்டத்தின் கீழ் தோட்டக்கலை உதவி இயக்குனர் திரு.பரத்குமார் அவர்களின் வழிகாட்டுதலின்படி காய்கறி பயிர்களில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை குறித்த செயல்முறை விளக்கம் திம்பட்டி கிராமத்தில் முன்னோடி விவசாயி திரு. ராமதாஸ் அவர்களின் தோட்டத்தில் விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டது. இச் செயல்முறை விளக்கப் பயிற்சியில் அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் திரு. பிரசாந்த் அவர்கள் ஒருங்கிணைந்த பூச்சி கட்டுப்பாட்டு முறைகளான மஞ்சள் ஒட்டு பொறி, இன கவர்ச்சி பொறி மற்றும் வேப்பெண்ணை கரைசல் பயன் பாடுகள் குறித்து விளக்கினார். உதவி தொழில்நுட்ப மேலாளர் திரு. சர்குணசீலன் உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகளான ட்ரைகோடெர்மா விரிடி, பசிலோமைசிஸ் மற்றும் பேவேரிய ஆகியவற்றை பயன் படுத்தும் முறைகள் குறித்து விளக்கினார். விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை தொகுப்பு இலவசமாக வழங்கப்பட்டது.
தமிழக குரல் செய்திகளுக்காக மேற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் K .A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.


No comments:
Post a Comment