நீலகிரி மாவட்டம் மேரா யுவா பாரத் (இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம், இந்திய அரசு) சார்பில் விகாஸ் அபியான் விழிப்புணர்வு நிகழ்ச்சி உதகையில் உள்ள சேரிங் கிளாஸ் பகுதியில் அமைந்துள்ள மேரா யுவா பாரத் அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மேரா யுவா பாரத் – நீலகிரி மாவட்ட பொறுப்பாளர் திரு. ரஞ்சித் குமார் அவர்கள் விகாஸ் அபியான் திட்டத்தின் செயல்பாடுகள் மற்றும் அதன் பயன்கள் குறித்து விரிவான விளக்குரை நிகழ்த்தினார். அவரது உரையை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் வரவேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பாளர்களாக நீலகிரி மாவட்ட விளையாட்டு அலுவலர் திருமதி இந்திரா அவர்கள்,
Dr. Anuradha Sunil, நிறுவனர் – W சக்தி பவுண்டேஷன், புதுடில்லி,
திரு. N. மாரியப்பன், நிறுவனர் – மனிதவள மேம்பாட்டு அறக்கட்டை,
திரு. M. மாரிமுத்து, தலைவர் – நேதாஜி இளைஞர் நல சங்கம்,
திரு. மதிவாணன், தலைவர் – ஃபியூச்சர் இந்தியா ஸ்போர்ட்ஸ் அண்ட் கல்ச்சுரல் டெவலப்மெண்ட் ஃபவுண்டேஷன்
ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
மேலும் இந்நிகழ்ச்சியில் இளையோர் மன்றங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன. இன்றைய நிகழ்ச்சியில் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
இந்நிகழ்ச்சியின் நன்றி உரையை சங்கீதா அவர்கள் நிகழ்த்தினார்.


No comments:
Post a Comment