நீலகிரி மாவட்டம், குன்னூர்.பிப்ரவரி -4. வெளிச்சம் அறக்கட்டளையின் சார்பாக குன்னூர் ஒய் எம் சி ஏ-வில் மாபெரும் தொழில் புரட்சி மாநாடு மற்றும் மகளிர் தின கொண்டாட்டம் நடைபெற்றது.
இதில் அறக்கட்டளையின் நிறுவனர் திருமதி.டெய்சி பத்மினி மற்றும் உறுப்பினர்கள் உறுப்பினர்களுடன் 40 -வகையான தொழில் சார்ந்த வாய்ப்புகள் மற்றும் ஆலோசனைகள் காண விழாவாக கொண்டாடப்பட்டது.
இவ்விழாவில் திருமதி. சுஜாதா ரவி அவர்கள் பெண்கள் எவ்வாறு தடைகளை தாண்டி வெல்ல வேண்டும் என்ற விழிப்புணர்வு வழிகாட்டுதலும் செய்தார். மேலும் குன்னூர் பகுதியை சார்ந்த சமூக ஆர்வலர்கள், சமூக தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
இவ்விழாவில் பெண்களின் கைவண்ண பொருட்களும்,அலங்கார பொருட்களும்,உணவு சம்பந்தமான ஊட்டச்சத்து பொருட்களும் மக்களின் பார்வைக்காகவும் வியாபாரத்திற்காகவும் ஒரே இடத்தில் வைக்கப்பட்டு இருந்தது மிகவும் சிறப்பாக இருந்தது...
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...


No comments:
Post a Comment