கூடலூர், தோட்டத் தொழிலாளர் தொழிற் பயிற்சி நிலையத்தில் கேப்டன் PL பெருமாள் – நூற்றாண்டு விழா - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 24 January 2026

கூடலூர், தோட்டத் தொழிலாளர் தொழிற் பயிற்சி நிலையத்தில் கேப்டன் PL பெருமாள் – நூற்றாண்டு விழா

 


கூடலூர், தோட்டத் தொழிலாளர் தொழிற் பயிற்சி நிலையத்தில்  கேப்டன் PL பெருமாள் – நூற்றாண்டு விழா


கூடலூர், தேவர்சோலை சாலையில் இயங்கி வரும் தோட்டத் தொழிலாளர் தொழிற் பயிற்சி நிலையத்தில் (PWITI) 23.01.2026 அன்று முற்பகல் 10.00 மணியளவில் கேப்டன் PL பெருமாள் அவர்களின் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இவ்விழாவினை தொழிற் பயிற்சி நிலைய முதல்வர் திரு. ஷாஜி M. ஜார்ஜ் அனைவரையும் வரவேற்றார், விழாவிற்கான ஏற்பாடுகளை கேப்டன் PL பெருமாள் அவர்களின் குடும்பத்தினர் செய்தார்கள்.


இவ்விழாவிற்கு திரு.K.P.முகமது, தலைவர்,  நீலகிரி தோட்டத் தொழிலாளர் சங்கம், திரு.V.K.நல்லமுத்து, பொது செயலாளர், தமிழ்நாடு INTUC, ஏற்காடு, திரு.N.ஜெயராமன், Liaison Officer, Coffee Board, திருமதி.அஞ்சலி, மேம்பாட்டு அதிகாரி,  Tea Board, முன்னாள் மாணவர்கள், பெற்றோர், தற்போது பயிலும் மாணவர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர். 


விழாவில்  கேப்டன் PL பெருமாள் அவர்களின் மகனான திரு.P.வெங்கடாசலம், Chartered Accountant, Karaikudi, அவர்கள் தலைமை தாங்கி நடத்தினார். கேப்டன் PL பெருமாள் அவர்கள் நீலகிரி தோட்டத் தொழிலாளர்கள் சங்கத்தின் நிறுவனராகவும், தலைவராகவும் இருந்தவர். விழாவில் கேப்டன் PL பெருமாள் அவர்கள் தோட்டத் தொழிலாளர்கள் வாழ்க்கை உயர எடுத்த முயற்சிகளையும், அவர் இந்திய இராணுவத்தில் ஜவகர்லால் நேரு மற்றும் இந்திரா காந்தி ஆகியோரின் தலைமையில் பணியாற்றியதை பற்றியுமான காணொளி திறையிடப்பட்டது. தொடர்ச்சியாக கேப்டன் PL பெருமாள் அவர்களின் குடும்பத்தினர் சார்பாக தொழிற் பயிற்சி நிலைய மாணவர்கள் அனைவருக்கும் சீருடையும், சிறந்த மாணவர்கள் மூவருக்கு ஊக்கத்தொகையும் வழங்கினார்கள். பங்கு பெற்ற அனைவருக்கும் மதிய உணவும், நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு....

No comments:

Post a Comment

Post Top Ad