குழந்தை இயேசு திருத்தலம், கூடலூரில் கிறிஸ்துமஸ் குடிலானது வித்தியாசமான நவீன வடிவமைப்பில் Dr. மோ. ஜெரின் மேத்யுவால் வடிவமைக்கப்பட்டுள்ளது - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 25 December 2025

குழந்தை இயேசு திருத்தலம், கூடலூரில் கிறிஸ்துமஸ் குடிலானது வித்தியாசமான நவீன வடிவமைப்பில் Dr. மோ. ஜெரின் மேத்யுவால் வடிவமைக்கப்பட்டுள்ளது

 


குழந்தை இயேசு திருத்தலம், கூடலூரில் கிறிஸ்துமஸ் குடிலானது வித்தியாசமான நவீன வடிவமைப்பில் Dr. மோ. ஜெரின் மேத்யுவால் வடிவமைக்கப்பட்டுள்ளது. 


சமூக ஊடகங்கள் & சமூக வலைதளங்களின் பற்றிய விழிப்புணர்வு, இக்குடிலில் மடிக்கணினி வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளது. குழந்தை இயேசு திருத்தல மேடையில் அமைந்துள்ள இக்குடிலானது ஜனவரி 4 ஆம் தேதி வரைக்கும் இருக்கும். இக்குடிலை வடிவமைத்த Dr. மோ. ஜெரின் மேத்யு கூறுகையில் " ஒவ்வொரு ஆண்டும் வித்தியாசமான முறையில் குடில்களை அமைப்பதுண்டு. மக்கள் சமூக வலைதளங்கள், சமூக ஊடகங்கள் அதிகமாக உபயோகப்படுத்தி தேவையில்லாதவற்றில் பொழுதைப் போக்குகின்றார்கள். இக்கால மக்கள் நல்ல விஷயத்தை சமூக ஊடகங்கள், வலைத்தளங்கள் வழியாக தெரிந்து கொள்ள வேண்டும் . பின் வரும் காலங்களில் எந்தவொரு மாறுபாடுகள் அடைந்தாலும் கடவுளை மறக்கவோ, மறுக்கவோ கூடாது என கூறினார். பங்குத் தந்தை Fr. லியோன் பிரபாகரன் இக்குடிலைச் செய்ய என்னை ஊக்கப்படுத்தினார். மேலும், இக்குடிலைச் செய்ய சரியாக 8 நாட்கள் எடுத்துக்கொண்டது. என் அவர் கூறினார். மேலும் பல்வேறு மக்கள் இக்குடிலை கண்டுகளித்து செல்கின்றனர் என்றும் கூறினார்..


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு 

No comments:

Post a Comment

Post Top Ad