கூடலூர் அரசு கலை அறிவியல் கல்லூரியில் கல்வி நிறுவனங்களில் தெருநாய்களை நிர்வகித்தல் மற்றும் ரேபிஸ் தடுப்பு குறித்து விழிப்புணர்வு - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 16 December 2025

கூடலூர் அரசு கலை அறிவியல் கல்லூரியில் கல்வி நிறுவனங்களில் தெருநாய்களை நிர்வகித்தல் மற்றும் ரேபிஸ் தடுப்பு குறித்து விழிப்புணர்வு


 கூடலூர் அரசு கலை அறிவியல் கல்லூரியில் கல்வி நிறுவனங்களில் தெருநாய்களை நிர்வகித்தல் மற்றும் ரேபிஸ் தடுப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. 


கல்லூரி உதவி பேராசிரியர் மற்றும் கல்லூரி வேலை வாய்ப்பு அலுவலர் வே. மகேஷ்வரன் வரவேற்றார்.

 

ஆங்கில துறை தாலைவர் முனைவர் பொற்கோ தலைமை தாங்கினார்.


இளம் செஞ்சிலுவை சங்க மாவட்ட  ஒருங்கிணைப்பாளர் செல்வகுமார், பேராசிரியர்கள் முனைவர் கார்த்திக், முனைவர் சத்தியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட வட்டார மருத்துவ அலுவலர் கதிரவன் பேசும்போது 

ரேபிஸ் என்பது உயிர் இழப்பை ஏற்படுத்தும் கொடிய நோய் ஆகும். ரேபிஸ் என்பது வவ்வால், பூனை, நாய், ஓநாய், நரி போன்ற விலங்கினங்கள் கடித்தாதாலும் பரவும்.  

நாய்களுக்கு நரம்பு மண்டலத்தில் தான் ரேபிஸ் பாதிப்பு இருக்கும். தெருநாய்கள் ரேபிஸ் பாதித்து வெறிநாயாக மாறிய பின்னர் கடித்தால் வேகமாக ரேபிஸ் பரவும்.

நாய் கடியை கீறல், பற்கள் பதிந்து இருக்கும், கடித்து குதறுதல் 3 வகையாக பிரிக்கலாம். எந்தவகை நாய் கடியாக இருந்தாலும் 

கடித்தவுடன் நன்கு சோப்பு போட்டு சுமார் 10 முறையாவது கழுவ வேண்டும். அப்போதுதான் கிருமிகள் அப்புறப்படுத்த முடியும். அதனால்தான் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனையில் நாய் கடித்தால் கழுவ தனியாக பைப் தண்ணீர் வைக்கப்பட்டு இருக்கும். கவனக்குறைவாக இருக்கும் பட்சத்தில் ரேபிஸ் வரும். ரேபிஸ் வந்தவர்கள் தண்ணீர் பார்த்தால், வெளிச்சம் பார்த்தால் இறந்துவிடும் அபாயம் உள்ளது பிழைப்பது கடினம்.  எனவே முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். 

நாய் கடித்தால் முதலில் காயத்தை சுற்றி இமினோகுளோபின் தடுப்பூசி போடபடும்.  தொடர்ந்து 1, 3, 7, 14, 28 ஆகிய நாட்களில் முறையாக தடுப்பூசி அரசு மருத்துவமனைகளில் இலவசமாக  போட்டுக்கொள்ளலாம். தடுப்பூசி போட்டவர்களுக்கு 

2வது முறையாக கடித்தால் பூஸ்டர் டோஸ் 1, 3 நாட்களில் போடவேண்டும். நீலகிரி மாவட்டம் குன்னூரில் பாஸ்டியர் இன்ஸ்டியூட் நிறுவனம் ரேபிஸ் தடுப்பூசி தயாரிக்கிறது. தமிழகத்தில் முதல் மாவட்டமாக ரேபிஸ் பாதிப்பு இல்லாத மாவட்டமாக மாற கல்லூரி மாணவர்கள் முன்வர வேண்டும் என்றார். 


கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் செயலாளர் சிவசுப்பிரமணியம் பேசும்போது 

நாய்கள், பூனைகள் வீடுகளில் வளர்க்கும் போது எச்சரிக்கையுடன் வளர்க்கவேண்டும். நாம் உண்ணும் உணவு பத்திரங்களை நாய்கள், பூனைகள் எச்சில் பாடாமல் பார்த்து கொள்ள வேண்டும். அதுபோல நாய் கடிக்கவந்தால் கைகளை உயர்த்தியபடி நேராக நின்று விடவேண்டும். நாய்கள் நம்மைவிட பெரியவர்களாக நினைத்து திரும்பிவிடும். மேலும் நாய் பூனைகளுக்கும் கால்நடை துறை மூலம் தடுப்பூசி போட்டுக்கொள்வது நல்லது கல்வி நிலையங்களில் உணவு கழிவுகள் இருப்பதால் தான் நாய்கள் வருகின்றனர். உணவு கழிவுகள் இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும் என்றார். 


நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் முனைவர் மணிகண்டன் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள் மாணவர்கள் 200கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad